வங்கியில் நாளை முதியவர்களுக்கு மட்டுமே பணம்.
500,1000 ரூபாய் நோட்டுகளை மாற்ற சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வங்கிகள் திறந்திருக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நாளை வங்கிகளில் முதியவர்களுக்கு மட்டும்தான் பணம் விநியோகிக்கப்படும் என்று இந்திய வங்கிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அதன்படி, வங்கிகள் செயல்படும் நேரத்தில் முதியவர்கள் ரூபாய் நோட்டுக்களை மாற்றிக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வங்கி ஊழியர்கள் கூறுகையில், "வங்கி பணியாளர்களுக்கு வேலை சுமை அதிகரித்து வருகிறது. அதே நேரத்தில் வங்கிகளில் பணம் மாற்றுவதற்கும் மக்கள் கூட்டம் குறைந்து வருகிறது. இதனால்தான் நாளை முதியவர்களுக்கு மட்டும் பணம் விநியோகிக்கப்படுகிறது" என்றனர்.







கருத்துகள் இல்லை