மார்பகத்தை வர்ணிப்பதா? ரசிகர் மீது ஷராவ்யா கோபம்.
தெலுங்கில் பல படங்களில் நடித்திருக்கிறார் ஷராவ்யா. பேஸ்புக் வாயிலாக அவ்வப்போது ரசிகர்களுடன் கலந்துரையாடுகிறார். சமீபத்தில் 500, 1000 செல்லாததாக அறிவித்ததுபற்றி இணைய தள பக்கத்தில் ரசிகர்களிடம் தகவல் பரிமாறிக்கொண்டிருந்தார் ஷராவ்யா. அப்போது ஒரு ரசிகர், குறுக்கீடு செய்த வண்ணம் இருந்தார். அதைகண்டு கொள்ளாமல் மற்றவர்களுடன் பேசிக்கொண்டிருந்த நிலையில், 'உங்களின் மார்பழகு என்னை கவர்கிறது' என அந்த ரசிகர் ஆபாசமாக வர்ணிக்கத் தொடங்கினார். இதில் கோபம் அடைந்த ஷராவ்யா அந்த ரசிகரை சரமாரியாக திட்டித் தீர்த்தார்.
'முக்கியமான விஷயம்பற்றி பேசிக்கொண்டிருக்கும்போது எதற்காக என்னுடைய உடம்பை கவனித்துக்கொண்டிருக்கிறீர்கள்.
இந்தியா கீழிறங்கிக்கொண்டிருக்கிறது முதலில் அதை கவனியுங்கள் (தொடர்ந்து கெட்டவார்த்தையில் திட்டினார்) ஆம் நான் கெட்ட வார்த்தை பேசுகிறேன். நிறையபேர் உங்களுடைய கமென்ட்டை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். நான் எனது உடம்ைப காட்டிக்கொண்டிருக்கவில்லை. எனது மார்பகத்தை புகழ்ந்து கொண்டிருக்காதீர்கள். ஆம், நான் எடுப்பான மார்பழகு கொண்டிருக்கிறேன். அதில் உங்களுக்கு என்ன பிரச்னை? உனது அம்மாவுக்கு இல்லையா? எல்லா பெண்களுக்கும் இயற்கையானது. முதலில் நான் சொல்லும் தகவலை கேளுங்கள். ஏற்கனவே உங்களைப் போன்றவர்களின் கமென்ட்களுக்கு நிறைய பதில் சொல்லிவிட்டேன். இந்த நேரத்தில் நான் அதைப்பற்றி பேசிக்கொண்டிருக்கவில்லை' என்றார்.







கருத்துகள் இல்லை