Header Ads

  • BREAKING



    NewsTEN காலை செய்திகள்;19/11/2016

    காலை செய்திகள்
             119\11\2016
    விவசாயிகள் தற்கொலைகளை தடுத்து நிறுத்த தமிழக அரசு
    தவறிவிட்டது! நேதாஜி சுபாஷ் சேனை தலைவர் டாக்டர் மகாராஜன்  குற்றச்சாட்டு
    விவசாயிகள் தற்கொலைகளை தடுத்து நிறுத்த தமிழக அரசு தவறிவிட்டது நேதாஜி சுபாஷ் சேனை தலைவர் டாக்டர் மகாராஜன்
    குற்றசாட்டியுள்ளார்.
    மோடியின் உருவபொம்மையைஎரித்த SDPI கட்சினர் கைது
    500 ரூபாய் மற்றும்1000 ரூபாய் தாள்கள் செல்லாது என்று அறிவித்த மத்திய பிஜேபி மோடி அரசாங்கத்தை கண்டித்து SDPI கட்சினர் நாகப்பட்டிணத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, மத்திய அரசுக்கு எதிரான முழக்கங்களை எழுப்பியபடி மோடியின் உருவபொம்மையை எரித்த SDPI கட்சினர் கைது செய்யப்பட்டனர்.
    விழுப்புரத்தில் ஆட்டோ ரேஸ்: சென்னை ஓட்டுநர்கள் 8 பேர் சிக்கினர்
    விழுப்புரத்தில் ஜானகிபுரம் பகுதியிலிருந்து விழுப்புரம் புறவழிச்சாலை வரை 8 பேர் மூன்று ஆட்டோக்களில் வாகனத்தில் செல்வோரை அச்சுறுத்தியபடி பந்தயத்தில் ஈடுபடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. ஆட்டோக்களை பறிமுதல் செய்து 8 பேரை கைது செய்துள்ளனர். அனைவரும் சென்னையைச் சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது.
    திருச்சி துவாக்குடி பகுதியில் உள்ள பெல் நகரில் ஓய்வு பெற்ற பெல் ஊழியர் வீட்டில் 50 பவுன் நகை மற்றும் 50 ஆயிரம் ரொக்கம் கொள்ளையடித்த சம்பவத்தில் வாழவந்தான் கோட்டையை சேர்ந்த பெல் ஊழியரின் மகன் சார்லஸ் கைது செய்யப்பட்டார்.
    வக்கீல் வீடு தாக்கப்பட்ட வழக்கு: சசிகலா புஷ்பா முன்ஜாமின் மனு தள்ளுபடி
    மதுரை: நெல்லை மாவட்டம், திசையன்விளையை சேர்ந்த வக்கீல் சுகந்தி வீடு தாக்கப்பட்ட வழக்கில், ராஜ்யசபா எம்.பி சசிகலா புஷ்பா இவரது கணவர் லிங்கேஸ்வர திலகன், மகன் பிரதீப் ராஜா ஆகியோர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தனர்.
    இதே வழக்கில் கைதான நாடார் அமைப்பை சேர்ந்த ஹரிநாடார், சந்திரகுமார் மற்றும் ராமலிங்கம் ஆகியோரும் தங்களுக்கு ஜாமீன் கோரி மனு செய்திருந்தனர்.
    இந்த மனுக்கள் நீதிபதி எஸ்.வைத்தியநாதன் முன் கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது. கூடுதல் அட்வகேட் ஜெனரல் புகழேந்தி ஆஜராகி, சசிகலா புஷ்பா உள்ளிட்டோர் மீது பாலியல் புகார் அளித்தவர்களுக்காக வக்கீல் சுகந்தி வழக்கு நடத்துகிறார்.
    புகாரை வாபஸ் பெற செய்யும் முயற்சியில் சசிகலா புஷ்பா தரப்பினர் ஈடுபட்டுள்ளனர். இதற்கு வக்கீல் சுகந்தி தடையாக இருப்பதாக கருதி அவரது வீட்டை தாக்கியுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களுக்கு ஜாமீன் வழங்கினாலும், சசிகலா புஷ்பா தரப்பினருக்கு முன்ஜாமீன் வழங்கினாலும் விசாரணை பாதிக்கும். எனவே, இந்த மனுக்களை அனுமதிக்க கூடாது என்றார்.
    உயர்நீதிமன்ற மதுரைக்கிளை
    மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல், அரசியல் காரணங்களுக்காக போலீசார் வழக்கு பதிந்துள்ளனர். வக்கீல் வீடு தாக்கப்பட்ட சம்பவமே போலீசாரால் ஏற்படுத்தப்பட்டது. எனவே, மனுக்களை அனுமதிக்க வேண்டும் என்றார். இதையடுத்து, வழக்கின் தன்மை, போலீசாரின் விசாரணை உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு இந்த மனுக்களின் மீது உத்தரவிடுவதாக கூறிய நீதிபதி, தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தார்.
    சென்னை நீலாங்கரையில் உள்ள தனியார் வங்கியில் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி நடைபெற்றுள்ளது. ஏடிஎம்மில் கொள்ளையடிக்க முயன்ற 3 பேரை பிடித்து பொதுமக்கள் போலீசில் ஒப்படைத்தனர்.

    எஸ்.பி.ஐ. வங்கி அதிகாரிகளுக்கு மலர் கொத்து கொடுக்கும் போராட்டம்
    வனங்களை அழித்த ஈஷா யோகா மையத்திற்கு மக்கள் வரிப்பணத்திலிருந்து 1 கோடி ரூபாயை தானமாக வழங்கிய, பரம ஏழையான சாராய வியாபாரி விஜய மல்லையாவிற்கு 1201 கோடி, உள்ளிட்ட 63 தொழில் அதிபர்கள் வாங்கிய கடன் 7000 கோடி ரூபாயை தள்ளுபடி செய்த State Bank Of India வங்கியை மனதார பாராட்டும் வகையிலும்,
    இளைஞர்களுக்கு சுய தொழில் தொடங்க கடன் தர மறுத்து, மாணவர்கள், விவசாயி வாங்கிய கடனை கேட்டு தொந்தரவு செய்து, கல்விக்கடனால் மாணவர் லெனினை தற்கொலைக்கு தூண்டிய, கல்விக் கடன் கட்ட இயலாத மாணவர்களின் புகைப்படத்தை வெளியிட்டு அவமானப்படுத்திய SBI வங்கியை கண்டித்து மலர் கொத்து கொடுக்கும் போராட்டம் 18.11.2016, காலை 11 மணிக்கு கோவை இரயில்நிலையம் அருகில் உள்ள SBI மண்டல வங்கி அலுவலகம் முன்பு பன்னீர செல்வம் தலைமையில் நடைபெற்றது.
    செங்கம் அருகே கிணறுதோண்டும் பணியில் ஈடுபட்டிருந்த 2 தொழிலாளர்கள் மண்சரிந்து விழுந்ததில் மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்தனர்
    பாஜக அமைச்சரின் காரில் ரூ. 91 லட்சம் பறிமுதல்
    மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநிலத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சராக சுபாஷ் தேஷ்முக் பதவி வகித்து வருகிறார். இந்த நிலையில் உஸ்மானாபாத் நகர் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது அமைச்சருக்கு சொந்தமா கார் ஒன்று வந்தது. காரில் இருந்து செல்லாது என்று அறிவிக்கப்பட்ட ஆயிரம் ரூபாய் நோட்டுகள் கொண்ட ரூபாய் 91 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
    இஸ்லாமிய மதபோதகர் ஜாகீர் நாயக்கின் இஸ்லாமிக் ரிசர்ச் பவுண்டேஷன் (ஐஆர்எப்) கல்வி அறக்கட்டளைக்கு 5 ஆண்டுகள் தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
    மாத ஊதியத்தை ரொக்கமாக வழங்க கோரிக்கை
    ரயில்வே ஊழியர்களுக்கு நவம்பர் மாத ஊதியத்தை ரொக்கமாக வழங்க தட்சிண ரயில்வே எம்ளாயிஸ் யூனியன் கோரிக்கை விடுத்துள்ளது.
    வங்கி வாசலில் காத்திருந்து 48 பேர் உயிரிழந்துள்ளதாக உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர் கபில் சிபல் தெரிவித்துள்ளார். மாதம் ரூ.10 ஆயிரம் மட்டுமே சம்பாதிப்பவர்களின் பணம் கருப்பு பணம் அல்ல என கபில் சிபல் தெரிவித்தார்.
    2வது நாளாக மை இல்லாததால் பணம் கொடுப்பது நிறுத்தம்!
    கீரமங்கலம் தபால் நிலையத்தில் பணம் பட்டுவாடா செய்ய டோக்கன் வழங்கப்பட்ட நிலையில் இரண்டாவது நாளாக அடையாள மை வைக்க மை வராததால் பணம் பட்டுவாடா நிறுத்தப்பட்டதால் டோக்கன் வாங்கிய பொதுமக்கள் திரும்பிச் சென்றனர்

    வங்கி கணக்கை தவறாக பயன்படுத்தினால் உரிய நடவடிக்கை: மத்திய அரசு எச்சரிக்கை!
    கருப்புப்பணத்தை யாரும் முறைகேடாக டெபாசிட் செய்ய தங்களுடைய வங்கிக் கணக்கை பயன்படுத்த அனுமதித்தால், பொதுமக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு எச்சரித்துள்ளது.
    கறுப்புப்பணம் மாற்ற பிறரது வங்கிகணக்கை சிலர் பயன்படுத்துவதாக தெரியவந்துள்ளது.வங்கிக் கணக்கை தவறாகப் பயன்படுத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.கறுப்புப்பணத்தை மாற்ற உதவுவோர் மீது வருமான வரித்துறையால் அபராதம் விதிக்கப்படும் --
    நிதியமைச்சர் அருண் ஜேட்லி
    போதை: பெற்ற குழந்தைகளை கழுத்தை நெரித்துக் கொன்ற தந்தை!
    பெங்களூரு:
    அதீத மது போதையில், தான் பெற்ற குழந்தைகளையே துடிதுடிக்க கழுததை நெரித்து குடிநோயாளி கொன்ற சம்பவம் கர்நாடக மாநிலத்தையே அதிரவைத்துள்ளது.

    நாடு முழுவதும் அடுத்த 5 நாட்களில் 70,000 ஏ.டி.எம். மையங்கள் மாற்றி அமைக்கப்படும் என மத்திய நிதியமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் ஏ.டி.எம்.களில் 60 லட்சம் வரை பணம் வரவு வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    வாகனத்துடன் சிலிண்டர் கொள்ளை
    காஞ்சிபுரம் மாவட்டம் கூடுவாஞ்சேரி பேருந்து நிலையம் அருகே நின்றுக்கொண்டிருந்த மினி வேனில் இருந்த 20-இந்தியன் கேஸ் சிலிண்டர் மற்றும் மினி வேனும் கடத்தல் மினி வேன் ஓட்டுநர்  கொடுத்த புகாரின் பேரில் கூடுவாஞ்சேரி போலீசார் விசாரணை.
    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை விவகானந்தாபுரத்தில் வசிக்கும், ஜெகநாதன் என்பவரது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டை உடைத்து ,30 சவரன் நகை, மற்றும் 10 கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளை. ஜெகநாதன் வெளியூர் சென்ற நிலையில் சம்பவம். தேவகோட்டை போலீஸார் விசாரணை.

    திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சித்தையன் கோட்டை பகுதியை சேர்ந்த. முத்துராஜா வாகன திருட்டு  மற்றும் வழிபறியில் ஈடுபட்டதற்க்காகவும் ,  மற்றும்  கன்னிவாடி பகுதியை சேர்ந்த. பாண்டி  முத்துசெல்வி என்ற சிறுமியை கடத்தி வந்து பாலியல் ரீதியாக தொந்தரவு செய்தும் பிச்சை எடுக்க வைத்தற்காக  இருவரையும்  மாவட்ட. ஆட்சியர் வினய் உத்தரவின் பேரில் மாவட்ட காவல்துறைகண்காணிப்பாளர்   சரவணன் பரிந்துரை  பேரில் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யபட்டனர்.

    ஜல்லிக்கட்டு முட்டுகட்டை போட்டது காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் மற்றும் திமுக தலைவர் கருணாநிதியும் தான், இந்துக்களின் பண்டிக்கை அனைத்தையும் முடக்கியது காங்கிரஸ் கட்சி தான். நாளை நடைபெற உள்ள 3 தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத்தேர்தலில் கடந்த முறையை விட பலமடங்கு பணபட்டுவாடா நடைபெற்று உள்ளது.- திண்டுக்கல்லில் பாரதீய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா பேட்டி.

    மூதாட்டியின் கழுத்தில் கத்தி
    காஞ்சிபுரம் மாவட்டம் கூடுவாஞ்சேரி அடுத்த மாடம்பாக்கத்தில் வீட்டில் தனியாக இருந்த வள்ளி -70. என்ற மூதாட்டியின் கழுத்தில் கத்தியை வைத்து கழுத்து மற்றும் கைகளில் இருந்த 10-பவுன் நகை பணம் கொள்ளை இருசக்கர வாகனத்தில் வந்த 3-பேர் கொண்ட கும்பர் கைவரிசை - கூடுவாஞ்சேரி போலீசார் விசாரணை.
    3 தொகுதிகளில் பறிமுதல் செய்யப்பட்ட தொகை
    தேர்தல் ஆணையம் தகவல்:தஞ்சை தொகுதியில் இதுவரை ₹9.19 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.திருப்பரங்குன்றத்தில் ₹4.10 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.அரவக்குறிச்சி தொகுதியில் இதுவரை ₹45 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.




    ஆசிட் குளத்தில் விழுந்தவரின் உடல் கரைந்த பரிதாபம்!
    அமெரிக்காவில் உள்ள Yellow Stone பூங்காவில் கொதிப்புடன் கூடிய அமில குளம் ஒன்று அமைந்துள்ளது.பூங்காவிற்கு சென்றிருந்த காலின் ஸ்காட் என்ற நபர் அக்குளத்தில் தவறி விழுந்தார்.சில நொடிகளில் அவரது உடல் முழுவதுமாக கரைந்துவிட்டது.
    ஆதிதிராவிட பள்ளிகளுக்கு, அடிப்படை வசதிகள் செய்யப்பட உள்ளன. தமிழகத்தில், 1,134 ஆதிதிராவிட பள்ளிகள் செயல்படுகின்றன. இவற்றில், 1.15 லட்சம் மாணவ, மாணவியர் படிக்கின்றனர். 18 மாவட்டங்களில் உள்ள, 48 பள்ளிகளுக்கு, கூடுதல் வகுப்பறைகள், கட்டடம், ஆய்வகம், கழிப்பறை, குடிநீர் வசதிகள் மற்றும் ஐந்து விடுதிகள் கட்ட நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது.
    இதற்கான, 'டெண்டர்' நேற்று வெளியிடப்பட்டது. 'இம்மாத இறுதியில், டெண்டர் முடிவு செய்யப்பட்டு, கட்டுமானப் பணிகள் துவக்கப்படும்' என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

    பணப்பாரிமாற்றம் நாளை இல்லை
    முதியோர்களுக்கு மட்டும் நாளை வங்கிகளில் பணம் விநியோகம்
    சென்னை-திருவனந்தபுரம் சென்ற ரயிலில் வெடிகுண்டு சோதனை
    சென்னை-திருவனந்தபுரம் சென்ற ரயிலை காட்பாடியில் நிறுத்தி சோதனை நடைபெற்றது. சென்னை சென்ட்ரலில் இருந்து கேரளா செல்லும் அனைத்து ரயில்களிலும் சோதனை நடத்த முடிவு செய்துள்ளனர். வெடிகுண்டு மிரட்டல் விடுத்த பெண் சென்னை திருவான்மியூரில் இருந்து பேசியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    வேலூர் மாவட்டத்தில் கடந்த 8 நாட்களில் வங்கிகளில் ரூ 1600 கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளது.

    சீனாவின் ஷென்ஸோ 11 விண்கலம் வெற்றிகரமாக பூமிக்கு திரும்பியது
    பீஜிங்:விண்வெளியில் நிரந்தரமான ஆய்வு நிலையத்தை நிறுவிட திட்டமிட்டுள்ள சீனா கடந்த 2013-ம் ஆண்டு ‘டியாங்காங் 1’ என்ற ஆய்வு விண்கலத்தை விண்ணில் செலுத்தியது. இந்த விண்கலத்தில் சென்ற மூன்று சீன விஞ்ஞானிகள் 15 நாட்கள் விண்வெளியில் தங்கியிருந்து பல்வேறு கட்ட ஆராய்ச்சிகளை நடத்தி முடித்து, வெற்றிகரமாக பூமிக்கு திரும்பினர்.இந்நிலையில், ஜிகுவான் மாகாணத்தில் உள்ள கோபி பாலைவனம் பகுதியில் இருந்து ‘டியாங்காங் 2’ என்ற விண்கலத்தை கடந்த செப்டம்பர் மாதம் 15-ம் தேதி சீனா வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.இதனையடுத்து, ‘ஷென்ஸோ 11’ என்ற விண்கலத்தில் இரண்டு விஞ்ஞானிகளை விண்வெளிக்கு அனுப்பி ‘டியாங்காங் 2’ விண்கலத்துடன் ‘ஷெங்ஸோ 11’ இணைத்து ஆய்வுப் பணிகளை மேற்கொள்வதற்கான அடுத்தகட்ட திட்டத்தை சீனா மேற்கொண்டது.இதன்படி, கடந்த அக்டோபர் மாதம் 17-ம் தேதி காலை 7.30 மணியளவில் ‘ஷெங்ஸோ 11’ விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. வடக்கு சீனாவில் கோபி பாலைவனத்தை ஒட்டியுள்ள ஜிக்குவான் ஏவுதளத்தில் இருந்து புறப்பட்டு சென்ற இந்த விண்கலத்தில் சீன விண்வெளி ஆய்வாளர்களான ஜிங் ஹெய்பெங்(50), சென் டாங்(37) ஆகியோர் சென்றனர். அவர்கள் இருவரும் ஒருமாத காலம் விண்வெளியில் தங்கியிருந்து பல்வேறு ஆய்வுப் பணிகளை மேற்கொண்டனர்.திட்டமிட்ட ஆராய்ச்சிகளை வெற்றிகரமாக நடத்திமுடித்த அவர்கள் இருவரும் சீனா மற்றும் ரஷியா ஆகிய நாடுகளுக்கு இடையில் உள்ள மங்கோலியா நாட்டின் வடபகுதியில் உள்நாட்டு நேரப்படி இன்று பிற்பகல் சுமார் 2 மணியளவில் ‘ஷென்ஸோ 11’ விண்கலம் பத்திரமாக தரையிறங்கினர்
    புதிய ஐநூறு எப்போது வரும்என்பதை பாதுகாப்பு கருதி சொல்லமுடியாது - ரிசர்வ் வங்கி
    புதிய ஐநூறு எப்போது வரும் என்பதை பாதுகாப்பு கருதி சொல்ல முடியாது - ரிசர்வ் வங்கி தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகளுக்கு பணம் வழங்கும்படி ரிசர்வ் வங்கிக்கு உத்தரவிட்கோரி விழுப்புரம் சேர்ந்த ராம்மூர்த்தி என்பவர் தாக்கல் செய்த வழக்கு நீதிபதி கிருபாகரன் முன்னிலையில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு வழக்கறிஞர், பணம் மாற்றுவது தொடர்பாக பல்வேறு உயர்நீதிமன்றங்களில விசாரிக்க தடை செய்ய வேண்டும் என மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளதாக தெரிவித்தார். இதையடுத்து, ரிசர்வ் வங்கி வரக்கறிஞர் புதிய ஐநூறு ரூபாய் நோட்டுக்கள் எப்போது வரும் என்பதை பாதுகாப்பு காரணங்கள் கருதி கூற முடியாது என தெரிவித்தார். அப்போது நீதிபதி உள்நாட்டில் பல எதிரிகள் இருக்கிறார்கள் என்று கூறியதோடு ரிசர்வங்கியின் வாதத்தை ஏற்றுக்கொண்டார். ஆனால் இந்த பிரச்சனைகளுக்கு அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருக்கலாம் என கருத்து தெரிவித்தார். மேலும் ஓரிரு நாட்களில் நிலமை சீராகும் என நினைத்தால், தற்போது 8 நாட்கள் ஆகியும் நிலமை சீரடையவில்லை. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். மேலும் பணம் மாற்றுவது தொடர்பாக உயர்நீதிமன்றங்கள் விசாரித்து உத்தரவு பிறப்பிக்க தடை கேட்டு உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு வழக்கு தொடுத்திருப்பதால், தற்போது எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என கூறி வழக்கு விசாரணையை அடுத்த வாரத்துக்கு ஒத்தி வைத்தார்.


    இடது கை விரலில் மை வைக்க வேண்டாம் என வங்கி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்
    இடது கை விரலில் மை வைக்க வேண்டாம் என வங்கி அதிகாரிகளுக்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார். 3 தொகுதிகளின் தேர்தல் நடத்தும் அதிகாரினள் வங்கிகளுக்கு அறுவுறுத்தி உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


    ஈரோட்டில் பயிர் கருகியதால் மனமுடைந்து விவசாயி தற்கொலை
    ஈரோடு மாவட்டம்  தாமரைக்குளத்தில் விவசாயி முத்துசாமி தற்கொலை செய்துகொண்டுள்ளார். நிலத்தில் பயிரிட்டிருந்த மஞ்சள் பயிர் கருகியதால் மனமுடைந்து விவசாயி முத்துசாமி தனது நிலத்திலேயே விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக உறவினர்கள் தகவல் தெரிவித்துள்ளனர் .

    ரூபாய் நோட்டு செல்லாது என்ற மத்திய அரசின் அறிவிப்பால் மக்கள் பாதிப்பு : அகிலேஷ் யாதவ்
    ரூபாய் நோட்டு செல்லாது என்ற மத்திய அரசின் அறிவிப்பால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் உத்திரபிரதேச முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் கண்டனம் தெரிவித்துள்ளார். விவசாயிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.

    இந்தியா-இங்கிலாந்து 2வது டெஸ்ட் போட்டி: இந்திய அணி 455/10
    விசாகப்பட்டிணம்: இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான 2வது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் இந்திய அணி அனைத்து  விக்கெட்டுகளையும் இழந்து 455 ரன்களை குவித்துள்ளது. 2ம் ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் கேப்டன் கோலி 167(267) ரன்கள் எடுத்திருந்த நிலையில்  ஆட்டமிழந்தார். அஸ்வின் 58(95) அரைசதம் விளாசினார். இதனையடுத்து இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 455 ரன்கள் குவித்துள்ளது.

    தொழில்நுட்பத்தால் இயக்கப்படும் இந்தியாவுக்கு புதிய கண்டுபிடிப்புகள் முக்கியத்துவம் வாய்ந்தவை. ரயில்வே உடனான என் பந்தம் மிகவும் திடமானது. என் குழந்தைப் பருவம், ரயில்வே பிளாட்ஃபார்மில் தான் கடந்தது. ரயில்வே துறையில் மாற்றம் கொண்டு வர நான் ஆர்வம் காட்டுவதற்கு இதுவும் ஒரு காரணம். ரயில்வே பட்ஜெட் பற்றிய மத்திய அரசின் முடிவு ரயில்வே வளர்சிக்காக எடுக்கப்பட்டது. அம்முடிவில் எந்த அரசியலும் இல்லை --மோடி
    

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad