புதுவையில் பிரசாரம் இன்று மாலை ஓய்கிறது: வெளியூர் நபர்கள் வெளியேற உத்தரவு.
புதுச்சேரி, நெல்லித்தோப்பு தொகுதியில் தேர்தல் பிரசாரம் வியாழக்கிழமையுடன் ஓய்வதால் வெளியூர் நபர்கள் மாலை 5 மணிக்கு வெளியேற வேண்டும் என தொகுதி தேர்தல் அலுவலர் வ.மலர்க்கண்ணன் தெரிவித்துள்ளார்.
அவர் புதன்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது: இடைத்தேர்தலுக்கான பிரசாரம் வியாழக்கிழமை மாலை 5 மணியுடன் நிறைவடைகிறது. தேர்தல் பிரசாரம் செய்ய வந்துள்ள வெளியூர் நபர்கள் தொகுதியில் இருந்து வெளியேற வேண்டும்.
தேர்தல் அமைதியாகவும், நேர்மையாகவும் நடத்த தேர்தல் துறை அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது. தொகுதி முழுவதும் பதற்றமான பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
பணம், பரிசுப் பொருள், மதுபான நடமாட்டங்களை தடுக்க பறக்கும் படைகள் கூடுதலாக அமைக்கப்பட்டுள்ளன.
இடைத்தேர்தலுக்காக 19ஆம் தேதி (சனிக்கிழமை) ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க நெல்லித்தோப்பு தொகுதியில் உள்ள அனைத்து தொழில்நிறுவனங்கள், கடைகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றார் மலர்க்கண்ணன்.







கருத்துகள் இல்லை