அமெரிக்கா-வடகொரியா இடையே போர் மூளும் ஆபத்து.
அமெரிக்காவின் விமானம் தாங்கி போர்க்கப்பலை மூழ்கடித்து தங்கள் ராணுவ வலிமையை காட்டப் போவதாக வட கொரியா எச்சரித்துள்ளது. மேற்கு பசிபிக் கடல்பகுதியில் 2 ஜப்பான் போர்க்கப்பல்கள் மற்றும் அமெரிக்க போர்க்கப்பல் ஆகியவை கூட்டுப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளன. யு.எஸ்.எஸ். கார்ல் வின்சன் என்ற அந்தப் போர்க்கப்பலை கொரிய கடல் பகுதிக்கு செல்லுமாறு அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். வடகொரியாவின் அணு ஆயுத மிரட்டலை அடுத்து இந்த நடவடிக்கையை அமெரிக்கா மேற்கொண்டது. இந்நிலையில் கொரியாவை நெருங்கினார் அந்தப் போர்க்கப்பலை அழித்துவிடப் போவதாக வடகொரியா கடற்படையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.








கருத்துகள் இல்லை